டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நிஷிகோரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஜோகோவிச் + "||" + US Open: Djokovic beats Nishikori to enter final

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நிஷிகோரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நிஷிகோரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸின் அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை வீழ்த்தி செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். #NovakDjokovic
நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் (செர்பியா), உலக தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் நிஷிகோரியை சந்தித்தார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ஜோகோவிச் கை ஓங்கியிருந்தது. அது போலவே 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் நிஷிகோரியை வீழ்த்தி செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ரபெல் நடால் அரையிறுதியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து நடாலை எதிர்த்து விளையாடிய டெல்போட்ரோ இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில் வரும் 10-ந் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை சந்திக்க இருக்கிறார்.