டென்னிஸ்

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் ஊக்கத்தொகை + "||" + Winning medal in Asian Games Table tennis players Rs 6 lakh incentive

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் ஊக்கத்தொகை

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் ஊக்கத்தொகை
ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்தியன், அந்தோணி அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.

சென்னை, 

சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்தியன், அந்தோணி அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இதே போல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனிகா பாத்ராவுடன் இணைந்து சரத்கமல் வெண்கலத்தை கைப்பற்றினார்.

டேபிள் டென்னிசில் சாதித்த தமிழக வீரர்கள் மூன்று பேருக்கும், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவில், அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.6 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. வீரர்களுடன் கலந்துரையாடிய மாணவர்கள், தாங்கள் வரைந்த ஓவியத்தை பரிசாக அளித்தனர்.