டென்னிஸ்

சீன ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி + "||" + Chinese Open tennis: wozniacki in final

சீன ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி

சீன ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி
சீன ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி, செவஸ்தோவா ஆகியோர் மோத உள்ளனர்.
பீஜிங்,

மொத்தம் ரூ.60 கோடி பரிசுத்தொகைக்கான சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-1, 6-3 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை குயாங் வாங்கை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 4-6, 4-6 என்ற நேர்செட்டில் லாத்வியா வீராங்கனை செவஸ்தோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி-செவஸ்தோவா ஆகியோர் மோதுகிறார்கள்.