டென்னிஸ்

ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Shanghai Open Tennis: djokovic progress to 3rd round

ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள செர்பியா வீரர் ஜோகோவிச், 41-ம் நிலை வீரரான ஜெர்மி சார்டியை (பிரான்ஸ்) சந்தித்தார். 1 மணி 23 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் ஜெர்மி சார்டியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் மரின் சிலிச் (குரோஷியா) 6-2, 6-7 (6-8), 5-7 என்ற செட் கணக்கில் நிகோலஸ் ஜார்ரியிடம் (சிலி) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா), போர்னா கோரிச் (குரோஷியா), பீட்டர் ஜோகோவிஸ்க் (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர், ஜோகோவிச்
ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியின், அரைஇறுதிக்கு பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
2. ஷாங்காய் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டி ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், வோஸ்னியாக்கி, பெட்ரா க்விடோவா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச், வோஸ்னியாக்கி, பெட்ரா க்விடோவா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
4. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
5. விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் ஜோகோவிச்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றார்.