மராட்டிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஆண்டர்சன், சிமோன்


மராட்டிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஆண்டர்சன், சிமோன்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:30 PM GMT (Updated: 2 Jan 2019 10:29 PM GMT)

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது.

புனே,

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2–வது சுற்றில் இறங்கிய தென்ஆப்பிரிக்க முன்னணி வீரர் கெவின் ஆண்டர்சன், லாஸ்லோ ஜிரேவை (செர்பியா) எதிர்கொண்டார். இதில் ஆண்டர்சன் 7–6 (3) 7–6 (6) என்ற நேர் செட் கணக்கில் ஜிரேவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். 6–ம் நிலை வீரரான ஆண்டர்சன் அடுத்து ஜாமி முனாருடன் (ஸ்பெயின்) மோத இருக்கிறார்.

நடப்பு சாம்பியன் ஜிலெஸ் சிமோன் (பிரான்ஸ்9 தன்னை எதிர்த்த பெலாரஸ் வீரர் இவாஸ்காவை 6–7 (3), 6–2, 6–1 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார். இந்த வெற்றியை பெற சிமோனுக்கு 2 மணி 29 நிமிடங்கள் தேவைப்பட்டது. சிமோன் கால்இறுதியில் பிரான்சின் பெனோய்ட் பேரை சந்திக்கிறார்.

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 25–வது இடத்தில் உள்ள தென்கொரியாவின் ஹயோன் சுங் 6–7,2–6 என்ற நேர் செட்டில் எர்னெஸ்ட்ஸ் குல்பிசிடம் (லாத்வியா) வீழ்ந்தார்.


Next Story