கத்தார், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: பாவ்டிஸ்டா, நிஷிகோரி சாம்பியன்


கத்தார், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: பாவ்டிஸ்டா, நிஷிகோரி சாம்பியன்
x
தினத்தந்தி 6 Jan 2019 9:30 PM GMT (Updated: 6 Jan 2019 8:44 PM GMT)

கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்தது.

டோகா,

கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்தது. இதில் அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்த ராபர்ட்டோ பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), இறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த மோதலில் பாவ்டிஸ்டா அகுத் 6–4, 3–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையுடன், ரூ1½ கோடியை பரிசாகவும் தட்டிச்சென்றார். இது அவரது 9–வது பட்டமாகும்.

ஆஸ்திரேலியாவில் நடந்த பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் நிஷிகோரி 6–4, 3–6, 6–2 என்ற செட் கணக்கில் டேனில் மெட்விடேவை (ரஷியா) தோற்கடித்து மகுடம் சூடினார். 9 இறுதிப்போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்று இருந்த நிஷிகோரி அந்த சோகத்துக்கு ஒரு வழியாக முடிவு கட்டியிருக்கிறார். மொத்தத்தில் இது அவரது 12–வது சர்வதேச பட்டமாக அமைந்தது.

இதன் பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 4–6, 7–5, 6–2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் லெசியா சுரென்கோவை வீழ்த்தி கோப்பைக்கு முத்தமிட்டார். ஒரு கட்டத்தில் முதல் செட்டை பறிகொடுத்து 2–வது செட்டிலும் 3–5 என்று தோல்வியின் விளிம்புக்கு தள்ளப்பட்ட பிளிஸ்கோவா, மனம் தளராமல் போராடி மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story