டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபனை 7–வது முறையாக வென்று ஜோகோவிச் சாதனை ரபெல் நடாலை பந்தாடினார் + "||" + Winning the Australian Open 7th time Jokovic achievement

ஆஸ்திரேலிய ஓபனை 7–வது முறையாக வென்று ஜோகோவிச் சாதனை ரபெல் நடாலை பந்தாடினார்

ஆஸ்திரேலிய ஓபனை 7–வது முறையாக வென்று ஜோகோவிச் சாதனை ரபெல் நடாலை பந்தாடினார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடாலை துவம்சம் செய்து செர்பியாவின் ஜோகோவிச் 7–வது முறையாக பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடாலை துவம்சம் செய்து செர்பியாவின் ஜோகோவிச் 7–வது முறையாக பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலிய ஓபன்

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா கடந்த 2 வார காலமாக மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2–ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) மோதினர். இரு நட்சத்திர வீரர்கள் கோதாவில் குதித்ததால் களத்தில் சூடுபறக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சூப்பர் பார்மில் உள்ள ஜோகோவிச் முதல் புள்ளியில் இருந்தே வலுவாக கோலோச்சினார். தவறுகளுக்கு அதிகம் இடம் கொடுக்காமல் ஷாட்டுகளில் வேகமும், துல்லியமும் காட்டிய ஜோகோவிச் மளமளவென புள்ளிகளை குவித்தார். அதே சமயம் அவரது எந்த சர்வீஸ்சையும் முறியடிக்க முடியாமல் நடால் பரிதவித்து போனார். இதனால் ஆட்டம் ஒரு தரப்பாக நகர்ந்தது.

ஜோகோவிச் சாம்பியன்

ஒவ்வொரு செட்டையும் எளிதில் வசப்படுத்திய ஜோகோவிச், கடைசி செட்டில் நடாலின் சர்வீசை பிரேக் செய்து ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். வெற்றி உறுதியானதும் ஜோகோவிச் மண்டியிட்டு மைதானத்திற்கு முத்தமிட்டு பரவசமடைந்தார்.

2 மணி 4 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் ஜோகோவிச் 6–3, 6–2, 6–3 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியன் நடாலை பந்தாடி, கோப்பையை சொந்தமாக்கினார். ஆஸ்திரேலிய ஓபனுக்கு ஜோகோவிச் கையில் ஏந்துவது இது 7–வது முறையாகும். ஏற்கனவே 2008, 2011, 2012, 2013, 2015, 2016 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு வாகை சூடியிருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபனை அதிக முறை உச்சிமுகர்ந்தவர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இதற்கு முன்பு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன் தலா 6 முறை வென்றதே சாதனையாக இருந்தது. அவர்களை ஜோகோவிச் பின்னுக்கு தள்ளினார். ஒட்டுமொத்தத்தில் ஜோகோவிச்சின் 15–வது கிராண்ட்ஸ்லாம் மகுடமாக அமைந்தது. கடைசியாக நடந்த 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் (விம்பிள்டன், அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன்) ஜோகோவிச்சே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பையை வென்ற 31 வயதான ஜோகோவிச்சுக்கு ரூ.20¾ கோடியும், 2–வது இடம் பிடித்த நடாலுக்கு ரூ.10½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

இரட்டையர் பிரிவில்...

ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் பிரான்சின் நிகோலஸ் மகுத்– பியரே ஹூக்ஸ் ஹெர்பர்ட் ஜோடி 6–4, 7–6 (7–1) என்ற செட் கணக்கில் கோன்டினென் (பின்லாந்து)– ஜான் பீர்ஸ் (ஆஸ்திரேலியா) இணையை வீழ்த்தி முதல்முறையாக இந்த பட்டத்திற்கு முத்தமிட்டது.

மகுத்–ஹெர்பர்ட் கூட்டணி ஏற்கனவே 2015–ல் அமெரிக்க ஓபன், 2016–ல் விம்பிள்டன், 2018–ல் பிரெஞ்ச் ஓபனை வென்று இருக்கிறார்கள். இதன் மூலம் 4 வகையான கிராண்ட்ஸ்லாமையும் ருசித்த 8–வது ஜோடி என்ற சிறப்பை பெற்றனர்.

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள்

‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன்–7, பிரெஞ்ச் ஓபன்–1, விம்பிள்டன்–4, அமெரிக்க ஓபன்–3 என்று மொத்தம் 15 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றி இருக்கிறார். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் அவர் 3–வது இடத்துக்கு வந்துள்ளார். இதில் டாப்–5 வீரர்கள் விவரம் வருமாறு:–

ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)–20 கிராண்ட்ஸ்லாம்

ரபெல் நடால் (ஸ்பெயின்)– 17

ஜோகோவிச் (செர்பியா)–15

பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா)–14

ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா)–12

‘‘சரியாக 12 மாதத்திற்கு முன்பு காயத்துக்கு ஆபரே‌ஷன் செய்து கொண்டேன். அதன் பிறகு இப்போது உங்கள் முன் (ரசிகர்கள்) பட்டத்தோடு நின்று கொண்டிருக்கிறேன். அதுவும் கடைசி 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3–ஐ நான் வென்று இருப்பது உண்மையிலேயே வியப்புக்குரியது. இந்த ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் நான் செய்த தவறுகளின் (பந்தை வலையில் மற்றும் வெளியே அடிப்பது) எண்ணிக்கை மிக மிக குறைவு. அந்த வகையில் மிகவும் அளிக்கிறது. ’’– ஜோகோவிச்.


தொடர்புடைய செய்திகள்

1. சைக்கிள் சக்கரத்தை தலையில் சுழலவிட்டு மாணவர் சாதனை
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் சேக் முகமது ரசீத் சைக்கிள் சக்கரத்தை தனது தலையில் சுழலவிட்டு சாதனையை நிகழ்த்தி காட்டினார்.
2. இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா 374 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ விஹாரி மீண்டும் சதம் அடித்து சாதனை
நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா– ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.
3. சிவகங்கையில் ஒரே மேடையில் 15 பேர் உலக சாதனை முயற்சி
சிவகங்கையில் ஒரே மேடையில் 15 பேர் உலக சாதனை முயற்சி செய்தனர். அதில், ரஷியாவை சேர்ந்த யோகா மைய நிறுவனர் ஐஸ் கட்டியில் 1¾ மணி நேரம் யோகாசனம் செய்து சாதனை படைத்தார்.
4. சென்னை விமான நிலையத்தில் 3½ நிமிடங்களில் 300 வகையான இயற்கை உணவு வேக வைக்காமல், எண்ணெய் இன்றி தயாரித்து கின்னஸ் சாதனை
சென்னை விமான நிலையத்தில் 3½ நிமிடத்தில் வேக வைக்காமல், எண்ணெய் இன்றி 300 வகையான இயற்கை உணவுகளை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர்.
5. சச்சினின் சர்வதேச சாதனையை முறியடித்த நேபாள இளம் கிரிக்கெட் வீரர்
சச்சின் தெண்டுல்கரின் சர்வதேச சாதனையை நேபாள நாட்டின் இளம் கிரிக்கெட் வீரர் ரோஹித் பாவ்டெல் முறியடித்து உள்ளார்.