டென்னிஸ்

மியாமி டென்னிஸ் போட்டி: பிரதான சுற்றை எட்டினார், குணேஸ்வரன் + "||" + Miami Tennis match

மியாமி டென்னிஸ் போட்டி: பிரதான சுற்றை எட்டினார், குணேஸ்வரன்

மியாமி டென்னிஸ் போட்டி: பிரதான சுற்றை எட்டினார், குணேஸ்வரன்
தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் பிரதான சுற்றுக்குள் நுழைந்தார்.
மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்), சிமோனா ஹாலெப் (ருமேனியா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), ஸ்விடோலினா (உக்ரைன்), ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச் (செர்பியா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மரின் சிலிச் (குரோஷியா) உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.


இந்த போட்டிக்கான தகுதி சுற்றில் களம் இறங்கிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜாய் கிளார்க்கை (இங்கிலாந்து) வீழ்த்தி பிரதான சுற்றுக்குள் நுழைந்தார். உலக தரவரிசையில் 84-வது இடம் வகிக்கும் குணேஸ்வரன், பிரதான சுற்றில் 61-ம் நிலை வீரர் ஜாமி முனாரை (ஸ்பெயின்) சந்திக்கிறார்.