டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர் அரைஇறுதிக்கு முன்னேற்றம் + "||" + Miami Open Tennis Tournament Federer progress to semi-final

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மியாமி, 

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) சந்தித்தார். மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் சிமோனா ஹாலெப் 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அதன் பிறகு அபாரமாக செயல்பட்ட பிளிஸ்கோவா அடுத்த 4 கேம்களையும் தொடர்ச்சியாக தனதாக்கி அந்த செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டில் பிளிஸ்கோவா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி சிமோனா ஹாலெப்பை சரிவில் இருந்து மீளவிடாமல் தடுத்தார்.

73 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பிளிஸ்கோவா 7-5, 6-1 என்ற நேர்செட்டில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த தோல்வியின் மூலம் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் சிமோனா ஹாலெப்பின் வாய்ப்பு நழுவியது. மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட்டை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப்போட்டியில் பிளிஸ்கோவா-ஆஷ்லிக் பார்டி பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

அரைஇறுதியில் பெடரர்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-0, 6-4 என்ற நேர்செட்டில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனை எளிதில் தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற பெடரருக்கு 1 மணி 25 நிமிடம் தேவைப்பட்டது. மற்றொரு கால்இறுதியில் கனடா வீரர் டெனிஸ் ‌ஷபோவாலோவ் 6-7 (5-7), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.