டென்னிஸ்

மியாமி டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–ஜான் இஸ்னர் + "||" + Miami Tennis: Federer-John Isner in the final

மியாமி டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–ஜான் இஸ்னர்

மியாமி டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–ஜான் இஸ்னர்
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

மியாமி, 

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5–வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6–2, 6–4 என்ற நேர்செட்டில் 23–ம் நிலை வீரரான கனடாவின் டெனிஸ் ‌ஷபோவாலோவை விரட்டியடித்து 5–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற பெடரருக்கு 72 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜான் இஸ்னர் (அமெரிக்கா) 7–6 (7–3), 7–6 (7–4) என்ற நேர்செட்டில் கனடாவை சேர்ந்த 18 வயது இளம் வீரரான பெலிக்ஸ் அகெரை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 1 மணி 53 நிமிடம் நீடித்தது. இறுதிப்போட்டியில் பெடரர்–ஜான் இஸ்னர் மோதுகிறார்கள். இருவரும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் பெடரர் 5 முறையும், ஜான் இஸ்னர் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.