டென்னிஸ்

சர்வதேச டென்னிஸ் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா ‘சாம்பியன்’ + "||" + International tennis Spain Player Munguraja 'champion'

சர்வதேச டென்னிஸ் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா ‘சாம்பியன்’

சர்வதேச டென்னிஸ் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா ‘சாம்பியன்’
சர்வதேச டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீராங்கனையான முகுருஜா சாம்பியன் பட்டம் வென்றார்.
மான்டெர்ரி,

மான்டெர்ரி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகளான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்)-விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) ஆகியோர் மோதினார்கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கார்பின் முகுருஜா 6-1, 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது விக்டோரியா அஸரென்கா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் கார்பின் முகுருஜா சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். கடந்த ஆண்டில் இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்த கார்பின் முகுருஜா அதன் பிறகு வென்ற முதல் பட்டம் இதுவாகும். 3 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக சர்வதேச போட்டியின் இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்த அஸரென்கா பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து நடையை கட்டினார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அஸரென்கா தரவரிசையில் 7 இடம் முன்னேறி 60-வது இடத்தை பிடித்துள்ளார்.