டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சிமோனா ஹாலெப் இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Madrid Open Tennis Simona Halleb Eligibility for the final

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சிமோனா ஹாலெப் இறுதிப்போட்டிக்கு தகுதி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சிமோனா ஹாலெப் இறுதிப்போட்டிக்கு தகுதி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 11–வது இடத்தில் உள்ள மரின் சிலிச்சை (குரோஷியா) சந்திக்க இருந்தார். உணவு ஒத்துக்கொள்ளாததால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மரின் சிலிச் போட்டியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து ஜோகோவிச் ஆடாமலேயே அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியில் அவர் அரைஇறுதிக்குள் நுழைவது இது 6–வது முறையாகும்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் இருக்கும் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப், 18–வது இடத்தில் உள்ள பெலின்டா பென்சிக்கை (சுவிட்சர்லாந்து) எதிர்கொண்டார். 1 மணி 57 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் 6–2, 6–7 (2–7), 6–0 என்ற செட் கணக்கில் பெலின்டான் பென்சிக்கை வீழ்த்தி 3–வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.