விம்பிள்டன் டென்னிசில் 100–வது வெற்றியை பெற்று பெடரர் சாதனை


விம்பிள்டன் டென்னிசில் 100–வது வெற்றியை பெற்று பெடரர் சாதனை
x
தினத்தந்தி 10 July 2019 10:00 PM GMT (Updated: 10 July 2019 9:18 PM GMT)

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.

லண்டன், 

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6–4, 6–0, 6–2 என்ற நேர் செட் கணக்கில் டேவிட் கோபினை (பெல்ஜியம்) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுத் 7–5, 6–4, 3–6, 6–3 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் குடோ பெல்லாவை விரட்டியடித்து அரைஇறுதியை உறுதி செய்தார். பாவ்டிஸ்டா, கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல்முறையாகும்.

இன்னொரு ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4–6, 6–1, 6–4, 6–4 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷிகோரியை தோற்கடித்து 13–வது முறையாக அரைஇறுதியை எட்டினார். விம்பிள்டனில் பெடரர் ருசித்த 100–வது வெற்றி இதுவாகும். கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் குறிப்பிட்ட போட்டியில் 100 வெற்றிகளை குவித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை 37 வயதான பெடரர் தன்வசப்படுத்தினார்.


Next Story