டென்னிஸ்

தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டிசென்னையில் 12-ந் தேதி தொடக்கம் + "||" + National Junior Tennis Tournament Beginning in Chennai on the 12th

தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டிசென்னையில் 12-ந் தேதி தொடக்கம்

தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டிசென்னையில் 12-ந் தேதி தொடக்கம்
மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) சார்பில் அடிடாஸ் ஆதரவுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய டென்னிஸ் போட்டி சென்னையில் வருகிற 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை,

மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) சார்பில் அடிடாஸ் ஆதரவுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய டென்னிஸ் போட்டி சென்னையில் வருகிற 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. காஸ்மாபாலிட்டன், பிரசிடென்சி, ஜிம்கானா கிளப், எம்.சி.சி. மைதானம் ஆகியவற்றில் இந்த போட்டி நடைபெறுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டி நடத்தப்படுகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அஜய் மாலிக் (அரியானா), கபிர் ஹான்ஸ் (ஒடிசா), கிஷன் ஹூடா (சத்தீஷ்கார்), சுஷாந்த் தபாஸ் (அரியானா), பூபதி, சந்தீப், ராஜேஷ் கண்ணன், ரிஷி பாவேந்தன் (4 பேரும் தமிழ்நாடு) உள்பட முன்னணி வீரர்களும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சல்சா அஹெர் (மராட்டியம்), ஷரண்யா (மராட்டியம்), காஷிஷ் பாட்டியா (டெல்லி), பிரேமா விசாரே (மராட்டியம்), லாவண்யா, காவ்யா, சரண்யா, குந்தனா (4 பேரும் தமிழ்நாடு) உள்பட முன்னணி வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் ரங்கராவ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், செயலாளர் விஜய்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.