டென்னிஸ்

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை:மீண்டும் வருகிறார், கிம் கிலிஸ்டர்ஸ் + "||" + Former number one tennis player: Coming back, Kim Killisters

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை:மீண்டும் வருகிறார், கிம் கிலிஸ்டர்ஸ்

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை:மீண்டும் வருகிறார், கிம் கிலிஸ்டர்ஸ்
பெல்ஜியத்தை சேர்ந்த கிம் கிலிஸ்டர்ஸ், முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்தார்.
பிரஸ்சல்ஸ், 

பெல்ஜியத்தை சேர்ந்த கிம் கிலிஸ்டர்ஸ், முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்தார். 2007-ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் குழந்தை பெற்றுக்கொண்டு 2009-ம் ஆண்டு மீண்டும் டென்னிஸ் களம் திரும்பினார். அதே ஆண்டில் அமெரிக்க ஓபனை வென்ற கிலிஸ்டர்ஸ், 2011-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனிலும் மகுடம் சூடினார்.

2012-ம் ஆண்டு 2-வது முறையாக டென்னிசுக்கு முழுக்கு போட்ட கிம்கிலிஸ்டர்சுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் டென்னிஸ் ஆசை துளிர்விட்டுள்ளது. மூன்று குழந்தைகளின் தாயான 36 வயதான கிலிஸ்டர்ஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘டென்னிஸ் விளையாட்டை இன்னும் நான் நேசிக்கிறேன். ஆனால் என்னால் முன்பு போல் உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா? என்பது தான் கேள்வி. அதைத் தான் எனக்குள் சவாலாக எடுத்துக் கொள்கிறேன். முன்பு போல் வலுவான வீராங்கனையாக இருக்க விரும்புகிறேன். அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து சர்வதேச டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறேன். வலுவான வீராங்கனையாக இருக்க விரும்புகிறேன்’ என்றார்.