டென்னிஸ்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க பெடரர் முடிவு + "||" + Take part in the Tokyo Olympics The decision of Federer

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க பெடரர் முடிவு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க பெடரர் முடிவு
அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பெடரர் முடிவு செய்துள்ளார்.
டோக்கியோ,

டென்னிஸ் உலகின் ‘முடிசூடா மன்னன்’ என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் மகுடம் மட்டும் அவருக்கு இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது.


இதையடுத்து அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பெடரர் முடிவு செய்துள்ளார். இது குறித்து 38 வயதான பெடரர் கூறுகையில் ‘அடுத்த ஆண்டு (2020) கோடை காலத்தில் எந்த மாதிரியான போட்டிகளை தேர்ந்தெடுத்து ஆட வேண்டும் என்று எனது அணியினருடன் ஆலோசித்தேன். நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்று முடிவு செய்திருக்கிறேன். ஒலிம்பிக்கில் இரண்டு முறை சுவிட்சர்லாந்தின் தேசிய கொடியை ஏந்தி சென்றுள்ளேன். மீண்டும் ஒலிம்பிக்கில் கால்பதிப்பதை நினைத்து பரவசமடைகிறேன்’ என்றார்.