டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்விடோலினா, சிமோனா ஹாலெப் வெற்றி + "||" + Womens Tennis Championship Tournament

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்விடோலினா, சிமோனா ஹாலெப் வெற்றி

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்விடோலினா, சிமோனா ஹாலெப் வெற்றி
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா, சிமோனா ஹாலெப் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஷென்ஜென்,

உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் 49-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஷென்ஜென் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 3-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீராங்கனைகள் இரண்டு பிரிவாக (ரெட், ஊதா) பிரிக்கப்பட்டுள்ளனர்.


இதில் தொடக்க நாளில் நடந்த ரெட் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா), 7-ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த ஆஷ்லி பார்டி அடுத்த 2 செட்களிலும் சிறப்பாக செயல்பட்டு பெலின்டா பென்சிச்சை திணறடித்தார். 1 மணி 57 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஷ்லி பார்டி 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் பெலின்டா பென்சிச்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் நவோமி ஒசாகா (ஜப்பான்), 6-வது இடத்தில் உள்ள பெட்ரா கிவிடோவாவுடன் (செக்குடியரசு) மோதினார். 2 மணி 39 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் நவோமி ஒசாகா 7-6 (7-1), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கிவிடோவாவை சாய்த்து முதல் வெற்றியை ருசித்தார்.

2-வது நாளான நேற்று நடந்த ஊதா பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 8-வது இடத்தில் இருப்பவருமான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 7-6 (14-12), 6-4 என்ற செட் கணக்கில் 2-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவுக்கு (செக்குடியரசு) அதிர்ச்சி அளித்து வெற்றியை சொந்தமாக்கினார்.

இன்னொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 3-6, 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்குவை (கனடா) தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 34 நிமிடம் நீடித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைத்தளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் 2 பெண்கள் புகார்
சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை கோரி, 2 பெண்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தனர்.
2. திருக்கனூர் அருகே போராட்டம் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் மறியல்
திருக்கனூர் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. சேறும், சகதியுமாக உள்ள தெருவில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
சேறும், சகதியுமாக உள்ள தெருவில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.
4. மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
5. வயலில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை
புதுக்கோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது, மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.