டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணி அறிவிப்புலியாண்டர் பெயஸ் உள்பட முன்னணி வீரர்களுக்கு இடம் + "||" + Davis Cup Tennis Indian team announces match against Pakistan

டேவிஸ் கோப்பை டென்னிஸ்பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணி அறிவிப்புலியாண்டர் பெயஸ் உள்பட முன்னணி வீரர்களுக்கு இடம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணி அறிவிப்புலியாண்டர் பெயஸ் உள்பட முன்னணி வீரர்களுக்கு இடம்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி, 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. லியாண்டர் பெயஸ் உள்பட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செப்டம்பர் 14, 15-ந் தேதிகளில் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் இந்த போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய வீரர்களும், அகில இந்திய டென்னிஸ் சங்கமும் வேண்டுகோள் விடுத்தது.

இதனை அடுத்து போட்டி நவம்பர் 29, 30-ந் தேதிக்கு மாற்றப்பட்டதுடன், இருநாட்டுக்கும் பொதுவான இடத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் போட்டி நடைபெறும் இடம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. போட்டியை பொதுவான இடத்துக்கு மாற்றியது தவறாகும். இஸ்லாமாபாத்தில் போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம், சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்திடம் அப்பீல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சர்வதேச டென்னிஸ் சம்மேளன தீர்ப்பாயம் வருகிற 18-ந் தேதி இறுதி முடிவு எடுக்க இருக்கிறது.

இந்திய அணி அறிவிப்பு

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியை, அகில இந்திய டென்னிஸ் சங்கம் நேற்று அறிவித்தது. அணியில் 8 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மூத்த வீரரான லியாண்டர் பெயஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் அணிக்கு திரும்பி இருக்கிறார். விளையாடாமல் வெளியில் இருந்து அணியை வழிநடத்தும் கேப்டனாக இருந்த மகேஷ்பூபதிக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் வீரர் ரோகித் ராஜ்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். திவிஜ் சரண் திருமண வரவேற்பு வருகிற 23-ந் தேதி நடைபெறுவதாலும், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் திருமணம் வருகிற 28-ந் தேதி நடக்க இருப்பதாலும் இருவரும் அணியில் இடம் பெறவில்லை.

இந்திய டென்னிஸ் அணி வருமாறு:-

சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன், சசிகுமார் முகுந்த், சகெத் மைனெனி, ரோகன் போபண்ணா, லியாண்டர் பெயஸ், ஜீவன் நெடுஞ்செழியன், சித்தார்த் ராவத், கேப்டன்: ரோகித் ராஜ்பால், பயிற்சியாளர்: ஜீஷன் அலி.