டென்னிஸ்

கொரியா மாஸ்டர்ஸ் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் வெற்றி + "||" + Korea Masters Tennis: Srikanth wins first round

கொரியா மாஸ்டர்ஸ் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் வெற்றி

கொரியா மாஸ்டர்ஸ் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் வெற்றி
கொரியா மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார்.
குவாங்ஜூ,

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி குவாங்ஜூ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-17 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் வோங் விங் கி வின்சென்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா, ஜப்பான் வீரர் கசுமசா சகாயை சந்தித்தார். இதில் சமீர் வர்மா 11-8 என்ற கணக்கில் முன்னணியில் இருந்த போது கசுமசா சகாய் காயம் காரணமாக விலகினார். இதனால் சமீர் வர்மா வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரப் வர்மா 21-13, 12-21, 13-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் கிம் டோன்குனிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.