டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ஸ்பெயின் அணி ‘சாம்பியன்’ + "||" + Davis Cup tennis: Spain team champion

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ஸ்பெயின் அணி ‘சாம்பியன்’

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ஸ்பெயின் அணி ‘சாம்பியன்’
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
மாட்ரிட்,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றில் 18 அணிகள் கலந்து கொண்டு மோதின. இதில் ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட்டில் நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஒற்றையர் பிரிவில் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாவ்டிஸ்டா அகுட் 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் 19 வயதான கனடா வீரர் பெலிக்ஸ் அஜிரை தோற்கடித்தார். அடுத்து நடந்த ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் 15-ம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவாலோவை (கனடா) வீழ்த்தினார். இதன் மூலம் ஸ்பெயின் அணி 2-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஸ்பெயின் அணி ஏற்கனவே 2000, 2004, 2008, 2009, 2011-ம் ஆண்டுகளில் இந்த கோப்பையை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானை பந்தாடியது இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
2. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தானில் இன்றும், நாளையும் நடக்கிறது.
3. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சசிகுமார் விலகல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து சசிகுமார் விலகினார்.
4. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தானில் நடைபெறும் - சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தகவல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடைபெறும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
5. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி: சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் முடிவை எதிர்த்து பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் அப்பீல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி தொடர்பாக, சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் முடிவை எதிர்த்து பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் அப்பீல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.