டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றி + "||" + Australian Open Tennis: Djokovic, Serena Williams wins first round

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் செர்பியா வீரர் ஜோகோவிச், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 7 முறை பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 37-ம் நிலை வீரரான ஜான் லெனர்ட் ஸ்டிரப்பை (ஜெர்மனி) சந்தித்தார்.


2 மணி 16 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-5), 6-2, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜான் லெனர்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கடந்த 14 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் முதல் சுற்றில் ஜோகோவிச் ஒரு செட்டை இழந்தது இதுவே முதல்முறையாகும்.

மற்றொரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் சிட்சிபாஸ் (கிரீஸ்), மாட்டியோ பெரேட்டினி (இத்தாலி), டிமிட்ரோவ் (பல்கேரியா), பிலிப் கோல்ஸ்ரிபெர் (ஜெர்மனி), சாம் குயர்ரி (அமெரிக்கா), குய்டோ பெல்லா (அர்ஜென்டினா), டேனியல் இவான்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் வெற்றி கண்டனர்.

போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்ததால் சில ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் நேற்று தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜப்பான் வீரர் தட்சுமோ இட்டோவுடன் மோத இருந்தார். மழை காரணமாக இந்த போட்டி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் ரஷியாவின் அனடாசியா போட்டாபோவாவை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் மேரி போஸ்கோவாவை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் லெசியா சுரென்கோவை (உக்ரைன்) சாய்த்தார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 39 வயது வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-7 (5-7), 3-6 என்ற நேர்செட்டில் 15 வயதான சக நாட்டு வீராங்கனை கோரி காப்பிடம் வீழ்ந்தார். இதேபோல் 2017-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-2, 5-7, 2-6 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை ஷூய் ஜாங்கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2011-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா) 1-6, 4-6 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் தகுதி சுற்று வீராங்கனையான 18 வயது கேத்தி மெக்நல்லியிடம் பணிந்தார்.

மற்ற ஆட்டங்களில் கிவிடோவா (செக்குடியரசு), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), சோபியா கெனின் (அமெரிக்கா), அலெக்சான்ட்ரோவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிடோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், கிவிடோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
2. சின்சினாட்டி டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர்.
3. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார், ஜோகோவிச்
கொரோனா பாதிப்பில் இருந்து ஜோகோவிச் குணமடைந்தார்.
4. பெடரர், நடால் அளவுக்கு ரசிகர்கள் ஆதரவை ஜோகோவிச் பெற முடியாது- முன்னாள் வீரர் மார்க் ரோசட் கணிப்பு
பெடரர், நடால் அளவுக்கு ரசிகர்கள் ஆதரவை ஜோகோவிச் பெற முடியாது என்று முன்னாள் வீரர் மார்க் ரோசட் தெரிவித்துள்ளார்.
5. ‘பெடரரை மிஞ்சுவேன்’ - ஜோகோவிச் நம்பிக்கை
டென்னிஸ் போட்டிகளில் பெடரரை மிஞ்சுவேன் என்று ஜோகோவிச் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.