ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ; ரோஜர் பெடரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ; ரோஜர் பெடரர்  அரையிறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 28 Jan 2020 10:11 AM GMT (Updated: 28 Jan 2020 10:11 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டமொன்றில் ரோஜர் பெடரர் மற்றும் டென்னிஸ் சான்ட் கிரென் இன்று விளையாடினர்.

உலக தர வரிசையில் 3வது இடத்தில் உள்ள பெடரர், உலக தர வரிசையில் 100வது இடத்திலுள்ள சான்ட்கிரென்னை 6-3, 2-6, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். இந்த போட்டி 4 மணிநேரம் மற்றும் 33 நிமிடங்கள் வரை நீடித்தது. இது, ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் காலிறுதியில் பெடரர் 15வது முறை பெற்ற வெற்றியாகும். அவர் 15-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார்.

இதுவரை மொத்தம் 20 பட்டங்களை வென்றுள்ள பெடரர் ஆஸ்திரேலிய ஓபனை 6 முறை வென்றுள்ளார். இதனால் 7 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றுள்ள நோவக் ஜோகோவிக் அல்லது உலக தர வரிசையில் 32வது இடத்தில் உள்ள மிலோஸ் ராவ்னிக் ஆகியோரில் ஒருவருடன் பெடரர் அரையிறுதி போட்டியில் விளையாடுவார்.

Next Story