டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் இருந்து விலகினார், பெடரர் + "||" + The French Open From tennis Quit Federer

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் இருந்து விலகினார், பெடரர்

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் இருந்து விலகினார், பெடரர்
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அரைஇறுதியுடன் வெளியேறினார்.
ஷூரிச்,

சுவிட்சர்லாந்து டென்னிஸ் ஜாம்பவானும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அரைஇறுதியுடன் வெளியேறினார். அந்த தொடரின் போது அவர் வலது கால் முட்டியில் காயத்தால் அவதிப்பட்டார். இந்த நிலையில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி அவருக்கு கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மே மாதம் இறுதியில் பாரீஸ் நகரில் தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.