டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-குரோஷியா மோதும் ஆட்டம் இன்று தொடக்கம் சிலிச்சை சந்திக்கிறார், ராம்குமார் + "||" + Davis Cup Tennis Hits India-Croatia match Start today

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-குரோஷியா மோதும் ஆட்டம் இன்று தொடக்கம் சிலிச்சை சந்திக்கிறார், ராம்குமார்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-குரோஷியா மோதும் ஆட்டம் இன்று தொடக்கம் சிலிச்சை சந்திக்கிறார், ராம்குமார்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா, முன்னாள் சாம்பியன் குரோஷியா இடையிலான ஆட்டம் குரோஷியா நாட்டின் ஜாக்ரெப் நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.
ஜாக்ரெப்,

ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 182-வது இடத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவரான ராம்குமார், 37-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை (குரோஷியா) சந்திக்கிறார். சிலிச், 2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை வென்றவர் ஆவார். எனவே சிலிச்சை, ராம்குமார் வீழ்த்துவது கடினம் தான்.


மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசையில் 132-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், குரோஷியாவின் போர்னா கோஜோவை எதிர்கொள்கிறார். அதே சமயம் இந்தியாவின் முன்னணி ஒற்றையர் பிரிவு வீரரான சுமித் நாகல் (127-வது இடம்) வெளியே உட்கார வைக்கப்பட்டார். ‘இந்த ஆடுகளம் மிதமான வேகம் கொண்டது. பந்து அதிகமாக எழும்பாது. இத்தகைய ஆடுகளத்திற்கு ராம்குமார் பொருத்தமாக இருப்பார் என்பதாலேயே சுமித் நாகலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை’ என்று இந்திய அணியை வெளியில் இருந்து வழிநடத்தும் கேப்டன் ரோகித் ராஜ்பால் தெரிவித்தார்.

இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அனுபம் வாய்ந்த லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா ஜோடி, குரோஷியாவின் மாட் பவிச்-பிராங்கோ சுகுகோர் இணையை சந்திக்கிறது.

அதைத் தொடர்ந்து மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் மரின் சிலிச்-குணேஸ்வரன், ராம்குமார்-போர்னா கோஜோ மோதுகிறார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டேவிஸ் கோப்பை போட்டியின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. “அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது” - பிரதமர் மோடி
அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவில் இறந்த கொரோனா நோயாளிகளில் 43 சதவீதம் பேருக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் இல்லை : அரசு பகுப்பாய்வு
இந்தியாவில் இறந்த கொரோனா நோயாளிகளில் 43 சதவீதம் பேருக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் இல்லை என அரசின் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
3. பிரதமர் மோடி லடாக்கில் திடீர் ஆய்வு: சீனா சொல்வது என்ன?
கல்வான் பள்ளத்தாக்கு மோதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
4. இந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு...?
இந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
5. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.