குரோஷியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பெயஸ்-போபண்ணா ஜோடி போராடி வெற்றி


குரோஷியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பெயஸ்-போபண்ணா ஜோடி போராடி வெற்றி
x
தினத்தந்தி 7 March 2020 11:52 PM GMT (Updated: 7 March 2020 11:52 PM GMT)

குரோஷியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், பெயஸ்-போபண்ணா ஜோடி போராடி வெற்றிபெற்றது.

ஜாக்ரெப்,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-குரோஷியா இடையிலான ஆட்டம் ஜாக்ரெப் நகரில் நடந்தது. முதல் நாளில் நடந்த இரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள் தோல்வி அடைந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 6-7 (8), 6-7 (8) என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சிடம் தோற்றதும் அடங்கும்.

நேற்று நடந்த இரட்டையர் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-ரோகன் போபண்ணா ஜோடி 6-3, 6-7 (9), 7-5 என்ற செட் கணக்கில் மாட் பவிச்- பிராங்கோ சுகுகோர் (குரோஷியா) இணையை 2 மணி 21 நிமிடங்கள் போராடி வீழ்த்தியது. 46 வயதான லியாண்டர் பெயஸ் டேவிஸ் கோப்பை இரட்டையர் பிரிவில் ருசித்த 45-வது வெற்றி இதுவாகும்.

இந்த போட்டியில் 1-2 என்று பின்தங்கி உள்ள இந்திய அணி எஞ்சிய இரு மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை எட்ட முடியும்.


Next Story