டென்னிஸ்

கொரோனா வைரஸ் எதிரொலி: விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் - சானியா மிர்சா + "||" + As athletes, we don't know what we are working for: Sania Mirza on fitness amid Covid-19 lockdown

கொரோனா வைரஸ் எதிரொலி: விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் - சானியா மிர்சா

கொரோனா வைரஸ் எதிரொலி: விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் - சானியா மிர்சா
விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வகையான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.
மும்பை,

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்தசூழ்நிலையில் விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வகையான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால்  உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு விளையாட்டு நிகழ்வுகளையும் ஒத்திப்போட வைத்துள்ளது. 

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா குறித்து டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியதாவது:-

இந்த சூழ்நிலை எளிதாக இல்லாவிட்டாலும் அனைவரும் தொற்று நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியில் இருக்க வேண்டும். 

ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கொரோனாவில் தங்களை காத்துக்கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் இது எளிதானது அல்ல. ஆனால் எங்களை விட நிறைய போராடும் மக்கள் நிறைய பேர் உள்ளனர். 

குறைந்தபட்சம்  வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதை நாம் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். விளையாட்டு வீரர்கள் என்ற வகையில், நாங்கள் எதற்காக இப்பொழுது உடற்பயிற்ச்சி செய்கிறோம் என்பது இப்போது எங்களுக்குத் தெரியாது.

நீங்கள் வீட்டில் நேரத்தை செலவழிக்க உங்கள் சொந்த வழிகளையும் முறையையும் கண்டுபிடிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கவும். மேலும் நன்றாக ஓய்வு எடுக்கவும். எப்போது நம் கையில் இவ்வளவு நேரம் மீண்டும் கிடைக்கப் போகிறது? அதனால் ஆக்கபூர்வமான வேலைகளை செய்யுங்கள் என்று நான் நம்புகிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.