பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைப்பு


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 7 May 2020 10:30 PM GMT (Updated: 7 May 2020 6:52 PM GMT)

கொரோனா அச்சத்தால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.


* பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமது நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரை பாருங்கள். கடந்த 2 ஆண்டுகளில் வெள்ளை நிற பந்தில் இந்திய அணிக்காக நிறைய வெற்றிகளை தேடித்தந்திருக்கிறார்கள். ஆனால் டெஸ்டில் அசத்தி வரும் அஸ்வின் (இந்தியா), நாதன் லயன் (ஆஸ்திரேலியா), யாசிர் ஷா (பாகிஸ்தான்) போன்ற சுழற்பந்து வீச்சாளர்களிடம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு பந்து வீச்சில் போதுமான வித்தியாசங்கள் இல்லாமல் இருக்கலாம்’ என்றார்.

* உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் மனிஷ் கவுசிக் கூறுகையில், ‘இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான குத்துச்சண்டை வீரர்கள் பார்ட்னர் (குத்துச்சண்டை பயிற்சிக்கு உதவுபவர்கள்) இல்லாமல் தனியாக பயிற்சி எடுக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக எனக்கு எனது சகோதரர் சாஹில் உதவுகிறார். காலையிலேயே அவருடன் இணைந்து பயிற்சி மேற்கொள்கிறேன். அவரும் ஒரு குத்துச்சண்டை வீரர் தான். இல்லாவிட்டால் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்திருக்கும். உலக போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலக்கை அடைந்து விட்டேன். அடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம்’ என்றார்.

* பாரீஸ் நகரில் மே 24-ந்தேதி தொடங்க இருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி கொரோனா அச்சத்தால் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள் அதற்கான தொகையை இந்த மாத இறுதிக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று பிரான்ஸ் டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய தேதியில் போட்டி நடந்தால் மறுபடியும் டிக்கெட் விற்கப்படும்.


Next Story