டென்னிஸ்

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் பட்டியலில் 2 டென்னிஸ் வீராங்கனைகள் + "||" + Naomi Osaka makes rich list history after toppling Serena Williams

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் பட்டியலில் 2 டென்னிஸ் வீராங்கனைகள்

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் பட்டியலில் 2 டென்னிஸ் வீராங்கனைகள்
அதிகம் சம்பாதிக்கும் 100 விளையாட்டு வீரர் பட்டியலில் 2 வீராங்கனை டென்னிஸ் வீராங்கனைகள் இடம்பெற்று உள்ளனர்.
வாஷிங்டன்

அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ வணிக இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.இதன்படி 2019-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் 2020-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி வரையிலான வீரர்களின் பட்டியலை வெளியிட்டள்ளது.

இதில், 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’அரியணையில் ஏறியுள்ளார், அவர் ஓராண்டில் குவித்த தொகை ரூ.802 கோடியாகும்.

2-வது இடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரரும், இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்காக விளையாடுபவருமான கிறிஸ்டியானா ரொனால்டோ உள்ளார். அவரது ஓராண்டு சம்பாத்தியம் ரூ.792 கோடியாகும். 

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி ரூ.784 கோடியுடன் 3-வது இடத்திலும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ரூ.720 கோடியுடன் 4-வது இடத்திலும், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லிப்ரோன் ஜேம்ஸ் ரூ.666 கோடியுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.


100 பேர் கொண்ட பட்டியலில் வீராங்கனைகளில் முதலிடம் பிடித்தவர், ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. கடந்த ஒரு வருடத்தில் ரூ. 284 கோடி (37.4 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 22 வயது ஒசாகா. ஒட்டுமொத்தப் பட்டியலில் அவருக்கு 29-வது இடமே கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்த மற்றொரு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். அவருக்கு 33-வது இடம். இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு செரீனா வில்லியம்ஸும் மரியா ஷரபோவாவும் 100 பேர் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.

1990 முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டு வருகிறது. இந்த விதத்தில், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் ரூ. 284 கோடி வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் ஒசாகா. இதற்கு முன்பு 2015-ல் மரியா ஷரபோவா 225.65 கோடி வருமானம் ஈட்டியதே அதிகமாக இருந்தது. அந்தச் சாதனையை ஒசாகா தாண்டியுள்ளார்.

முதல் இடத்தைப் பிடித்த ஒசாகா, கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்த வருடம் செரீனாவின் வருமானத்தை விடவும் ரூ. 10.64 கோடி (1.4 மில்லியன் டாலர்) அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளார் ஒசாகா.

கடந்த வருடம், உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (37) நான்காவது முறையாக முதலிடத்தைப் பிடித்தார். அவரது ஆண்டு வருவாய் சுமார் ரூ 207 கோடி ($29.2 மில்லியன்) என்று மதிப்பிடப்பட்டது. இந்த வருடம் செரீனா வில்லியம்ஸ் 36 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார்.

100 பேர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர், விராட் கோலி. கடந்த ஒரு வருடத்தில் ரூ. 196 கோடி சம்பாதித்து 66-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வருடம் அவர் 100-வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் இந்த வருடம் முன்னேற்றம் அடைந்துள்ளார். எனினும் இந்திய வீராங்கனைகள் ஒருவரும் இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்; ரோஷினி நாடார்
உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்தியமைச்சர் நிர்மலாசீதாராமன்; ரோஷினி நாடார், கிரண் மஜூதார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.