ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்


ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்
x
தினத்தந்தி 19 Jun 2020 8:42 AM GMT (Updated: 19 Jun 2020 8:42 AM GMT)

ரசிகர்கள் இல்லாமல் ஆகஸ்ட்மாதம் தஒடங்கும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகள்

நியூயார்க்

கொரோனா வைரஸ் உலகையை அச்சுறுத்தி கொண்டிருக்கும் வேளையில் விளையாட்டு போட்டிகள் அனைத்துமே இடைநிறுத்தம் செய்யப்பட்டு வந்தது.

அதில் கிராணட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் தொடரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டு வந்தநிலையில் போட்டி அமைப்பாளர்கள் திட்டமிட்டபடி போட்டியை குறித்து ஜூன் மாதம் முடிவு செய்வோம் என்று தெரிவித்தனர்.

இதன்படி அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஆகஸ்ட் 31-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் என நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.மேலும், போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story