டென்னிஸ்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா ? லியாண்டர் பயஸ் கவலை + "||" + Leander Paes Ready To Unleash His ''New Version'' But Concerned About Fate Of Olympics

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா ? லியாண்டர் பயஸ் கவலை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா ? லியாண்டர் பயஸ் கவலை
லியாண்டர் பயஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் இறங்கினால் ஒலிம்பிக்கில் தொடர்ந்து 8 முறை பங்கேற்ற ஒரே இந்தியர் பெருமையை பெறுவார்.
மும்பை,

இந்திய மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் இந்த ஆண்டுடன் டென்னிசில் விடை பெறுவதாக கூறியிருந்தார். ஆனால், டோக்கியா ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனதால் தனது முடிவை மாற்றிக்கொண்டு தொடர்ந்து விளையாட திட்டமிட்டு இருக்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் இறங்கினால் ஒலிம்பிக்கில் தொடர்ந்து 8 முறை பங்கேற்ற ஒரே இந்தியர் பெருமையை பெறுவார். ஆனால், தற்போதைய சூழலில் அடுத்த ஆண்டு கூட ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக  நடக்குமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அதனால், தனது வரலாற்று சாதனை பாதிக்கப்படுமோ என்று கவலை அடைந்துள்ளதாக லியாண்டர் பயஸ் தெரிவித்துள்ளார்.