டென்னிஸ்

5 மாதங்களுக்கு பிறகு சர்வதேச டென்னிஸ் இன்று தொடக்கம் + "||" + Palermo 2020 draw: Martic, Vondrousova, Sakkari star in Sicily

5 மாதங்களுக்கு பிறகு சர்வதேச டென்னிஸ் இன்று தொடக்கம்

5 மாதங்களுக்கு பிறகு சர்வதேச டென்னிஸ் இன்று தொடக்கம்
5 மாதங்களுக்கு பிறகு சர்வதேச டென்னிஸ் இன்று தொடங்க உள்ளது.
பாலெர்மோ

31-வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று முதல் 9-ந்தேதி வரை இத்தாலியில் நடக்கிறது. கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் டென்னிஸ் போட்டி தடைப்பட்டது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகு நடக்கப்போகும் முதல் சர்வதேச டென்னிஸ் தொடர் இதுவாகும்.


இந்த போட்டியில் விளையாட இருந்த வீராங்கனை ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இருப்பினும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெட்ரா மார்டிச் (குரோஷியா), மரியா சக்காரி (கிரீஸ்), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கோன்டாவெய்ட் (எஸ்தோனியா), வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) மிலாடெனோவிச் (பிரான்ஸ்) உள்ளிட்ட வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள்.