டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: அங்கிதா ரெய்னா வெளியேற்றம் + "||" + Angita Raina out

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: அங்கிதா ரெய்னா வெளியேற்றம்

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: அங்கிதா ரெய்னா வெளியேற்றம்
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது.
பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 3-6, 2-6 என்ற நேர் செட்டில் குருமி நராவிடம் (ஜப்பான்) வீழ்ந்தார். ஏற்கனவே சுமித் நாகல், ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகிய இந்திய வீரர்களும் தகுதி சுற்றுடன் வெளியேறினர். இதன் மூலம் இந்த முறை பிரெஞ்ச் ஓபன் பிரதான ஒற்றையர் பிரிவில் எந்த இந்தியர்களும் கால்பதிக்கவில்லை.