டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ஆடுகிறார், அங்கிதா + "||" + Angita plays in the Australian Open doubles division

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ஆடுகிறார், அங்கிதா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ஆடுகிறார், அங்கிதா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, மிஹாலா புஜர்னிஸ்குவுடன் (ருமேனியா) ஜோடி சேர்ந்து களம் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
மெல்போர்ன், 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, மிஹாலா புஜர்னிஸ்குவுடன் (ருமேனியா) ஜோடி சேர்ந்து களம் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம் ஓபன் எரா (1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாட தகுதி பெற்ற 5-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். நிருபமா மன்கட், நிருபமா வைத்தியநாதன், சானியா மிர்சா, ஷிகா ஓபராய் ஆகிய இந்திய வீராங்கனைகள் ஏற்கனவே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; டானில் மெத்வெடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு டானில் மெத்வடேவ் முன்னேறியுள்ளார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்ணீருடன் வெளியேறினார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நடால், ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.