டென்னிஸ்

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி + "||" + Montcarlo Masters Tennis In the 2nd round Djokovic wins

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
மான்ட்கார்லோ,

நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் 22-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் ஜின்னெரை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் ஜோகோவிச் தொடர்ச்சியாக பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் 11 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினாவின் பெட்ரிகோ டெல்போனிஸ்சை விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.