டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார், ஸ்டிரிகோவா


டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார், ஸ்டிரிகோவா
x
தினத்தந்தி 4 May 2021 10:44 PM GMT (Updated: 2021-05-05T04:14:58+05:30)

இரட்டையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான பார்போரா ஸ்டிரிகோவா (செக்குடியரசு) டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது கர்ப்பமாக உள்ள ஸ்டிரிகோவா கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு எந்த டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு செப்டம்பர் மாதத்தில் குழந்தை பிறக்க இருக்கிறது. சர்வதேச டென்னிசுக்கு விடைகொடுத்தாலும் ரசிகர்கள் முன்னிலையில் இன்னொரு ஆட்டத்தில் விளையாட விரும்புவதாகவும், அது 2022-ம் ஆண்டு விம்பிள்டனில் நடக்கும் என்று நம்புவதாகவும் ஸ்டிரிகோவா கூறியுள்ளார்.

35 வயதான ஸ்டிரிகோவா இதுவரை இரண்டு ஒற்றையர் பட்டமும், 31 இரட்டையர் பட்டமும் வென்றுள்ளார்.


Next Story