மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 8 May 2021 4:22 AM GMT (Updated: 2021-05-08T09:52:07+05:30)

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போராடி அமெரிக்காவின் ஜான் இஸ்னரை வெளியேற்றி 4-வது முறையாக அரைஇறுதியை எட்டினார். மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 6-4 என்ற நேர் செட்டில் சாய்த்தார். நடாலுக்கு எதிராக அலெக்சாண்டர் தொடர்ந்து பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.

பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-2, 6-3 என்ற நேர் செட்டில் பாவ்லிசென்கோவாவை (ரஷியா) எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் மகுடத்துக்கான இறுதி சுற்றில் சபலென்கா, ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியுடன் (ஆஸ்திரேலியா) மல்லுகட்டுகிறார்.


Next Story