டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் அஸரென்கா, அலெக்சாண்டர் + "||" + French Open Tennis: Azarenka, Alexander in the 3rd round

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் அஸரென்கா, அலெக்சாண்டர்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் அஸரென்கா, அலெக்சாண்டர்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அஸரென்கா, அலெக்சாண்டர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 7-6 (7-4), 6-3, 7-6 (7-1) என்ற நேர் செட்டில் தகுதி நிலை வீரரான ரோமன் சபியுலினை (ரஷியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் 11-ம் நிலை வீரர் பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்) 3-6, 6-2, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் 150- ம் நிலை வீரர் ஹென்ரி லாக்சோனிடம் (சுவிட்சா்லாந்து) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அதே சமயம் கிரீசின் சிட்சிபாஸ், ஜப்பானின் நிஷிகோரி, அமெரிக்காவின் ஜான் இஸ்னர், இத்தாலியின் போக்னினி, நார்வேயின் கேஸ்பர் ரூட் 2-வது தடையை கடந்தனர்.முன்னதாக நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் டெனிஸ் சான்ட்கிரீனை (அமெரிக்கா) வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரம் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 7-5, 6-4 என்ற நேர் செட்டில் கிளாரா டாசனை (டென்மார்க்) விரட்டினார். இதே போல் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-1, 7-5 என்ற நேர் செட்டில் அன்னி பெர்னாண்டசை (கனடா) சாய்த்து 3-வது சுற்றை உறுதி செய்தார்.

படோசா கிபெர்ட் (ஸ்பெயின்), வோன்ட்ரோசோவா, கேத்ரினா சினியகோவா (செக்குடியரசு) ஆகியோரும் தங்களது 2-வது சுற்றில் வெற்றியை ருசித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு முன்னேறினார் நடால் பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனை வெளியேற்றி சக்காரி அசத்தல்
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.
2. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜிடன்செக், அனஸ்டசியா
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீசில் நடந்து வருகிறது.
3. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேறினார்.
4. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், நடால்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், நடால், சோபியா கெனின் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
5. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி; நடால், செரீனா அசத்தல் வெற்றி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை பெலாரசின் சபலென்கா அதிர்ச்சி தோல்வியை தழுவினார். மற்ற ஆட்டங்களில் நடால், செரீனா வெற்றி பெற்றனர்.