அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் மெட்வதேவ்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் மெட்வதேவ்
x
தினத்தந்தி 5 Sep 2021 9:38 PM GMT (Updated: 2021-09-06T03:08:32+05:30)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வதேவும், பிரிட்டனின் டேன் இவான்சும் மோதினார்கள். 

இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெட்தேவ்  6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் இவான்சை வீழ்த்தினார். இதன் மூலம் காலிறுதி சுற்றுக்கும் மெட்த்வே முன்னேறியுள்ளார். 

Next Story