உலக ஆண்கள் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்


உலக ஆண்கள் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்
x
தினத்தந்தி 20 Nov 2021 6:36 AM GMT (Updated: 20 Nov 2021 6:36 AM GMT)

உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிரீன் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் நார்வேயின் கேஸ்பர் ரூட்டுடன் மோதினார்.

துரின்,

உலக தரவரிசையில் டாப்-8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடந்து வருகிறது. 

இதில் நேற்று இரவு நடந்த ‘கிரீன்’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ், 8-ம் நிலை வீரரான நார்வேயைச் சேர்ந்த கேஸ்பர் ரூட்டுடன் மோதினார். 

பரபரப்பான இந்த ஆட்டத்தில் கேஸ்பர் ரூட் 2-6, 7-5, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ரூப்லெவிற்கு அதிர்ச்சி அளித்து 2-வது வெற்றியைப் பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார். 

இந்த நிலையில் கிரீன் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் கேஸ்பர் ரூட், ரஷிய வீரர் டேனில் மெட்விடேவுடன் மோத இருக்கிறார்.

Next Story