பிரிட்டிஷ் விளையாட்டு விருதுகள்: இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக எம்மா ராடுகானு தேர்வு


பிரிட்டிஷ் விளையாட்டு விருதுகள்: இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக எம்மா ராடுகானு தேர்வு
x
தினத்தந்தி 7 Dec 2021 7:57 AM GMT (Updated: 7 Dec 2021 7:57 AM GMT)

19 வயதான ராடுகானு, அமெரிக்க ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் டென்னிஸ் உலகையே திகைக்க வைத்தார்.

லண்டன் ,

இந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று பிரபலமானவர் எம்மா ராடுகனு.18 வயதே ஆன எம்மா ராடுகனு கனடாவில் பிறந்தவர் .ஆனால் சிறு வயது முதலே பிரிட்டன்  நாட்டிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார்.தகுதி சுற்றின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்ற  இவர் அந்த தொடரில் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டியில் பட்டம் வென்றார்.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் விளையாட்டு விருதுகளில்  சிறந்த விளையாட்டு வீராங்கனைகான பட்டத்தை   எம்மா ராடுகானு பெற்றுள்ளார் .ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை மற்றும் சிறந்த  சர்வதேச புதுமுகப் வீராங்கனை பட்டங்களைப் அவர் தட்டிச்சென்றுள்ளார் . 19 வயதான ராடுகானு, அமெரிக்க ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் டென்னிஸ் உலகையே திகைக்க வைத்தார்.

இது குறித்து ராடுகானு கூறுகையில்  "இவ்வளவு சிறந்த விருதைப் பெறுவது மிகவும் மரியாதைக்குரியது .கடந்த காலத்தில் இந்த விருதுகளை தலை சிறந்த வீராங்கனைகள் வென்றுள்ளனர் .எனவே இந்த விருதை நானும் வென்றுள்ளேன் என்பது உண்மையில் நம்பமுடியாத சாதனையாகும்.எனக்கு இது மிகவும் சிறந்த ஆண்டாகும். மேலும் இது போன்ற  பயணத்தை இனி வரும் காலங்களில் நான் எதிர்நோக்குகிறேன்  " இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

Next Story