விம்பிள்டன்: ரபேல் நடால் ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்த தோனி - வைரலாகும் புகைப்படம்..!!


விம்பிள்டன்: ரபேல் நடால் ஆட்டத்தை  நேரில் கண்டு ரசித்த தோனி - வைரலாகும் புகைப்படம்..!!
x

Image Tweeted By @Wimbledon

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை தோனி உற்சாகமாக கண்டு ரசித்தார்.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் டெய்லர் பிட்சுடன் மோதினார். இந்த போட்டியில் நடால் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உற்சாகமாக கண்டு ரசித்தார். அவர் மட்டுமின்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பேக்காம் அவர்களும் விம்பிள்டன் போட்டியை காண வந்து இருந்தார்.

இந்த போட்டியின் போது தோனி உடன் ஒருவர் செல்பி எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விம்பிள்டன் தங்கள் அதிகாரபூர்வ சமூகவளைதள பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். தோனி இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story