சிம்மம் - வார பலன்கள்
நிர்வாகத் திறமை மிக்க சிம்ம ராசி அன்பர்களே!
சில நன்மைகளை அடையும் வாரம் இது. நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி ஒன்று இப்போது வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், பதவி உயர்வு, இடமாற்றம் பெறுவதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். கிரக நிலைகள் சரியாகும்போது, நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் உங்களைத் தேடி வரும்.
தொழில் செய்பவர்கள், அதிக லாபத்தைப் பெற முடியாது. வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். கூட்டுத் தொழிலை விரிவு செய்வது பற்றிய எண்ணத்தை சிறிது காலம் தள்ளிப்போடுங்கள்.
குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிரிந்து சென்ற உறவினர் தேடிவரக்கூடும். குலதெய்வ வழிபாடு ெசய்து வந்தால், உங்கள் கடுமையான முயற்சிகள் கண்டிப்பாக வெற்றிபெறும். புது முயற்சி தொடங்கும் முன்பு நன்கு யோசித்து செய்யவும்.
பரிகாரம்:- புதன்கிழமை சக்கரத்தாழ்வார் சன்னிதி முன்பு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் இன்னல்கள் நீங்கும்.