தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்திற்கான தரிசன டிக்கெட் 20-ந்தேதி வெளியீடு - தேவஸ்தானம் அறிவிப்பு + "||" + Darshan Ticket for March at Tirupati Ezhumalayan Temple on Feb 20 - Devasthanam Announcement

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்திற்கான தரிசன டிக்கெட் 20-ந்தேதி வெளியீடு - தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்திற்கான தரிசன டிக்கெட் 20-ந்தேதி வெளியீடு - தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட்டிற்கான முன்பதிவு 20-ந்தேதி தொடங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, மார்ச் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 

அதேபோல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலை, திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்க, 20-ந்தேதி மாலை 3 மணியளவில் காலியாக உள்ள அறைகளின் விவரம் ஆன்லைன் மூலமாக வெளியிடப்படுகின்றன.

எனவே அறைகள் தேவைப்படும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாட்களில் திருமலை, திருப்பதிக்கு வந்து, தாங்கள் முன்பதிவு செய்த அறைகளில் தங்கி ஓய்வெடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடப்பட்டுள்ளது.
2. திருப்பதி ஏழுமலையான் கோவிவில் வசந்தோற்சவம் 2-வது நாள்
திருப்பதி ஏழுமலையான் கோவிவில் வசந்தோற்சவம் 2-வது நாள் விழா நேற்று நடைபெற்றது.
3. திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 67 லட்சம் - அதிகாரிகள் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 67 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
4. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் நேற்று தொடங்கியது.
5. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா
ராமநவமி விழாவையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமர் பட்டாபிஷேக விழா நடைபெற்றது.