சினிமா செய்திகள்

மர்ம நபர்கள் மிரட்டல் ரேஸ் 3 படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு எஸ்கேப் ஆன சல்மான்கான் + "||" + alman Khan receives death threats: Police, rep say Race 3 shoot not stalled

மர்ம நபர்கள் மிரட்டல் ரேஸ் 3 படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு எஸ்கேப் ஆன சல்மான்கான்

மர்ம நபர்கள் மிரட்டல் ரேஸ் 3 படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு எஸ்கேப் ஆன சல்மான்கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுக்கு வந்த கொலை மிரட்டலால் ரேஸ் 3 படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அவர் வேகமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. #SalmanKhan #bollywood
மும்பை

மும்பையில் சல்மான்கானின் ரேஸ் 3 படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அப்போது மர்மநபர்கள் சிலர் ஆயுதங்களுடன் படப்பிடிப்புத் தளத்திற்குள் தடாலடியாக நுழைந்து சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். 

முன்னதாக ஜோத்பூரில் உள்ள மான்களை வழிபடும் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த தாதா சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அவரது ஆட்கள் ஆயுதங்களுடன் வந்து மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால், ரேஸ் 3 படப்பிடிப்பை உடனடியாக ரத்து செய்துவிட்டு சல்மான்கான் அவசரமாக வெளியேறினார். 

இதையடுத்து சல்மான்கானின் வீட்டிற்குபொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரை அடிக்கடி வெளியே தலைகாட்ட வேண்டாம் என்றும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

#blackbuckcase #JacquelineFeranandez #LawrenceBishnoi #Race3 #RameshTaurani #SalmanKhan  #bollywood

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகர் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு
பிரபல நடிகர் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
2. தீபாவளி விருந்தாக வரும் அமீர்கானின் 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்'
இந்தி சினிமாவின் டாப் நடிகர்களான அமிதாப்பச்சன் மற்றும் அமீர்கான் இணைந்து நடித்துள்ள 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது.
3. 7 பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம்
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமீர்கான், ஷாரூக்கான், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி உள்ளது.
4. 54 வயது நடிகரை திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையில் வீட்டை விட்டு ஓடி வந்த இளம்பெண்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து மும்பைக்கு ஓடிவந்த 24 வயது இளம்பெண் மீட்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.