ஸ்ரீதேவியிடம் விருது பெற்ற கமல்ஹாசன் மலரும் நினைவில் மூழ்கினார்


ஸ்ரீதேவியிடம் விருது பெற்ற கமல்ஹாசன்  மலரும் நினைவில் மூழ்கினார்
x
தினத்தந்தி 25 Jan 2018 5:52 AM GMT (Updated: 2018-01-25T11:22:09+05:30)

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ஹீரோயின் ஸ்ரீதேவியை சந்தித்ததும் மலரும் நினைவில் மூழ்கினார் கமல்ஹாசன். #KamalHaasan #Sridevi

மும்பை

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் விருது விழா நிகழ்ச்சி மும்பையில் நேற்று இரவு நடந்தது. இதில் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், தீபிகா படுகோன், பிரிநிதி சோப்ரா, ஷாகித் கபூர்,சித்தார்த் மல்கோத்ரா, ஹினாகான்,அபிஷேக் பச்சன்,சோனாக்‌ஷி சின்கா,  உள்பட இந்தி திரையுலகின் முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகர் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதை,  நடிகை ஸ்ரீதேவி வழங்கினார். பெற்றுக்கொண்ட கமல் பேசும்போது, 

ஸ்ரீதேவியிடம் இருந்து இந்த விருதை வாங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது ஒரு பெரிய பயணமாக இருந்தது. எனக்கு மலரும் நினைவுகள் வருகின்றன என்றார். விழாவில் ஸ்டைலிஷ் நடிகை விருது தீபிகா படுகோனுக்கும், ஸ்டைலிஷ் நடிகர் விருது ஷாகித் கபூருக்கும், பெண் சாதனையாளர் விருது நடிகை ரேகாவுக்கும் வழங்கப்பட்டது. அமிதாப் பச்சனுக்கு ஸ்டைல் சூப்பர் ஸ்டார் விருது வழங்கப்பட்டது.

#KamalHaasan #Sridevi #MostStylishAwards  

Next Story