திகில் படத்தில், சத்யராஜ்!


திகில் படத்தில், சத்யராஜ்!
x
தினத்தந்தி 24 Jan 2018 10:00 PM GMT (Updated: 2018-01-25T12:22:09+05:30)

நடிகர் சத்யராஜ் ஒரு முழு நீள திகில் படத்தில் நடிக்கிறார்.

டிப்பு திறமை மிகுந்த தென்னிந்திய நடிகர்களில், சத்யராஜும் ஒருவர். பல்வேறு குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், ‘பாகுபலி’ படத்தில் ‘கட்டப்பா’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அடுத்து இவர், ஒரு முழு நீள திகில் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்.

இந்த படத்தை ‘கள்ளப்படம்’ புகழ் வேல் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:–

‘‘ஒரு படத்தில் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள் மிகவும் அவசியம் என்று நம்புகிறவன், நான். இந்த படத்தில் சத்யராஜ் நடிக்க சம்மதித்ததும் பாதிக்கும் மேற்பட்ட வேலை முடிந்ததாக உணர்ந்தேன். படத்தில் வரும் மிக முக்கியமான அந்த கதாபாத்திரத்துக்கு அவரை விட பொருத்தமான நடிகர் யாரும் இல்லை.

ஒரு ‘எப்.எம்.’ ரேடியோ ஸ்டே‌ஷனில், ஒரு குறிப்பிட்ட இரவில் நடக்கும் அசாதாரண சம்பவங்களே படத்தின் மையக்கரு. கதையின் நம்பகத்தன்மைக்காக, ஒரு நிஜமான ‘எப்.எம்.’ ஸ்டே‌ஷனில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம். திகில் பட ரசிகர்களுக்கு இந்த படம், ஒரு கொண்டாட்டமாக இருக்கும். சத்யராஜ் நடிப்பில் இந்த கதையை இயக்குவதில், எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’’

Next Story