சினிமா செய்திகள்

காதல் திருமணம் செய்தநடிகர் யுதன் பாலாஜி விவாகரத்து + "||" + Actor Yuthan Balaji is divorced

காதல் திருமணம் செய்தநடிகர் யுதன் பாலாஜி விவாகரத்து

காதல் திருமணம் செய்தநடிகர் யுதன் பாலாஜி விவாகரத்து
காதல் திருமணம் செய்த நடிகர் யுதன் பாலாஜி-பிரீத்திக்கு கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது.
னா காணும் காலங்கள் டெலிவிஷன் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் யுதன் பாலாஜி. அதன் பிறகு அவர் சினிமாவுக்கு வந்தார். பட்டாளம் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். காதல் சொல்ல வந்தேன், வசந்த குமாரன், நகர்வலம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

யுதன் பாலாஜி இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரீத்தி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் சமீபத்தில் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் பிரிந்து விட முடிவு செய்தார்கள். இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. அப்போது இருவருக்கும் சமசரம் செய்து சேர்த்து வைக்க முயற்சிகள் நடந்து அது தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து கோர்ட்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கி உள்ளது. இந்த தகவலை யுதன் பாலாஜி தனது முகநூல், மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

“காதலர் தினத்தில் என்ன திட்டம் என்று எல்லோரும் கேட்கிறீர்கள். கடவுள் எங்களுக்கு வித்தியாசமான முடிவை கொடுத்து இருக்கிறார். வழக்கம்போல் காலையில் எழுந்து உயர்நீதி மன்றத்துக்கு சென்றேன். அங்கு எங்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இருவரும் அதிகாரப்பூர்வமாக சுமுகமாக பிரிந்து இருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

திருமணம் முடிந்து இரண்டு வருடத்தில் யுதன் பாலாஜி விவாகரத்து செய்து கொண்டது பட உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.