சினிமா செய்திகள்

அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் கதாநாயகர்கள் + "||" + heroes refuse to pair with Anushka

அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் கதாநாயகர்கள்

அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் கதாநாயகர்கள்
நடிகை அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும் இதனால் படங்களில் நடிப்பதை குறைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை அனுஷ்கா சினிமா அனுபவம் பற்றி கூறியதாவது:-

“நடிகர்-நடிகைகள் பலருக்கு படப்பிடிப்பு அரங்குக்குள் வரும்போது காட்சிகளில் எப்படி நடிக்கப் போகிறோமோ? என்ற பயம் இருக்கும். எனக்கும் ஆரம்பத்தில் அப்படி இருந்தது. ஆனால் இப்போது தைரியமாக இருக்கிறேன். தவறு செய்தால்தான் சரியானது எது என்பது தெரிய வரும். எனவே தவறுகளுக்காகவும் வருத்தப்படக் கூடாது.

நடிகர்-நடிகைகள் தங்களுக்குள் இருக்கும் பயத்தை விட்டொழிக்க வேண்டும். நமக்குள் இருக்கும் உண்மையான திறமைகளை வெளிப்படுத்த பயம் தடையாக இருக்கிறது. எந்த தொழிலாக இருந்தாலும் வேலையை செய்து கொண்டேதான் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் தவறு நடந்தால் திருத்திக்கொள்ளலாம். அந்த தவறுகளால் ஏற்படும் நஷ்டத்தில் கூட நமக்கு அனுபவங்கள் கிடைக்கும். நான் தவறுகளுக்காக எப்போதுமே பயப்படுவது இல்லை.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. எனவே அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். மாப்பிள்ளை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அனுஷ்கா படங்களில் நடிப்பதை குறைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய இளம் கதாநாயகர்களும் அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கின்றனர்.

தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் அனுஷ்காவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்திகள் பரவி உள்ளன. இதனை இருவரும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. 

ஆசிரியரின் தேர்வுகள்...