சினிமா செய்திகள்

உடல் நலத்தை பேணி வந்த ஸ்ரீதேவி + "||" + Sri Devi who maintained health

உடல் நலத்தை பேணி வந்த ஸ்ரீதேவி

உடல் நலத்தை பேணி வந்த ஸ்ரீதேவி
உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உடல் நலத்தை பேணி வந்த ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவி உடல் நலனை பேணுவதில் அக்கறை கொண்டவர். திருமணம் ஆனதும் பெண்கள் உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள் என்பார். நான் பொறித்த உணவுகளை சாப்பிட்டு 30 வருடங்கள் ஆகிவிட்டன என்றும் தெரிவித்து இருந்தார்.


250 முறை ஸ்கிப்பிங், வாரத்துக்கு இரண்டு தடவை நீச்சல் பயிற்சி என்று உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தார். தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த நாகேஸ்வரராவுடன் ஜோடியாக நடித்து இருந்த ஸ்ரீதேவி அவரது மகன் நாகார்ஜுனா ஜோடியாகவும் நடித்து இருக்கிறார். தர்மேந்திரா ஜோடியாக நடித்து அவரது மகன் சன்னி தியோலுடனும் ஜோடி சேர்ந்தார். போனிகபூரை மணந்து திரையுலகில் இரண்டு பெண்குழந்தைகளுக்கு தாயாகி சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தார். அப்படிப்பட்டவர் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் உறவினர்கள் தவித்தார்கள்.