சினிமா செய்திகள்

‘வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா + "||" + Madhavan, Bobby Simha changed the Web series

‘வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா

‘வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
இந்தியில் தயாராகும் புதிய வெப் தொடரில் நடிகர் மாதவனும், தமிழில் தயாராகும் இணையதள தொடர் ஒன்றில் பாபிசிம்ஹாவும் நடிக்கின்றனர்.
டெலிவிஷன் தொடர்களைப்போல் இணையதளங்களில் வெளியாகும் வெப் தொடர்களும் தற்போது பிரபலமாகி வருகின்றன. அமெரிக்காவில் அதிக அளவில் இணையதள தொடர்கள் தயாராகின்றன. திரைப்படங்களைப்போல் அதிக செலவில் இவற்றை தயாரித்து வெளியிடுகின்றனர். இதற்கும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இப்போது இந்தியாவிலும் வெப் தொடர்கள் தயாரிக்க தொடங்கி உள்ளனர். இந்தியில் உருவாகும் புதிய வெப் தொடர் ஒன்றில் நடிகர் மாதவன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதுபோல் தமிழில் தயாராகும் இணையதள தொடரில் பாபிசிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். வெப் தொடரிலும் வில்லனாகவே வருகிறார். கதாநாயகியாக பார்வதி நாயர் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

ஆசிரியரின் தேர்வுகள்...